Saturday, April 10, 2010

எது சுலபம்? எது கடினம்?

HI... U r visiting this post as


website hit counter


எது சுலபம்? எது கடினம்?
 
மற்றவர்களின் தவறுகளை  எடை  போடுவது  சுலபம் 
நம்முடைய   தவறுகளை  எடை  போடுவது  கடினம் 

நினைதையல்லாம்    பேசுவது சுலபம் 
நினைத்து  பார்த்து  பேசுவது  கடினம்

நம்மை  நேசிப்பவர்களை  காயப்படுத்துவது     சுலபம்
அந்த  காயத்தை ஆற்றுவது   கடினம்

மன்னிப்பு  கேட்பது  சுலபம்
மன்னிப்பது  கடினம் 

தூக்கத்தில் கனவு  காண்பது   சுலபம்
கனவுக்காக   விழித்திருந்து போராடுவது கடினம்

வெற்றியில் மகிழ்வது சுலபம்
தோல்வியை ஒப்புக் கொள்வது கடினம்

தவறி விழுவது  சுலபம்
உடனே எழுவது கடினம்

வாழ்கையைக் கொண்டாடுவது சுலபம்
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது கடினம்

உறுதிமொழி தருவது  சுலபம்
உறுதிமொழியைக் காப்பாற்றுவது கடினம்

பிறரை விமர்சிப்பது சுலபம்
நம்மை திருத்திக் கொள்வது கடினம்

தவறுகள் செய்வது சுலபம்
தவறுகளிலிருந்து பாடம் கற்பது கடினம்

நட்பை இழப்பது சுலபம்
நல்ல நட்பை பெறுவது கடினம்

மேம்பாடு பற்றி சிந்திப்பது சுலபம்
சிந்தித்ததைச் செயல்படுத்துவது கடினம்

பிறர் மீது பழி போடுவது சுலபம்
அவர்கள் கோணத்தில் பார்ப்பது கடினம்

பிறரிடம் இருந்து பெறுவது  சுலபம்
பிறருக்கு தருவது கடினம்

நற்பண்புகள் இல்லாது வாழ்வது சுலபம்
அப்பண்புகளுக்ககா வாழ்வது  கடினம்   


இப்படிக்கு
உங்கள் அன்பு நண்பண்
 வீ. சரவணன்


 

0 comments:

Post a Comment